இராணுவத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் உள்ள நிப்போன் கல்லி மற்றும் கலாசார மையத்தின் நிதி உதவியுடன்
இலங்கை இராணுவ சமூக பராமரிப்பு சேவையினரால் புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள
59ஆவது படைப்பிரிவில் அலுவலகத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு
நடைபெற்றுள்ளது.
கலந்து கொண்டோர்
இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக வன்னி பாதுகாப்பு படைத்தலைமை
அதிகாரி, மேஜர் ஜெனரல் ஜே.பி.சி. பீரிஸ் கலந்து கொண்டு
சிறப்பித்துள்ளனர்.
அத்துடன், நிப்போன் சேவை மையத்தின் பொதுச்செயலாளர் நிகதன்னி சந்திரசிறி அவர்களும்
கொக்கிளாய் விகாரையின் விகாராதிபதி திஸ்ஸ குணரத்தினவும் கலந்து கொண்டு
சிறப்பித்துள்ளனர்.
மேலும், இராணுவ உயர் அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த மிகவும் நலிவுற்ற குடும்பங்களை சேர்ந்த 36
மாணவர்களுக்கு புத்தகபைகள் மற்றம் காலணிக்கான பவுச்சர்கள் என்பன இதன்போது
வழங்கிவைக்கப்பட்டுள்ளன.