திருகோணமலையில் துப்பாக்கி சூட்டுக்கு உள்ளான சிப்பாய் ஒருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக திருகோணமலை தலைமையக காவல்துறை தெரிவித்துள்ளது.
இராணுவத்தின் 22 வது காலாட்படை பிரிவு தலைமையகத்தில் கடமையில் இருந்த சிப்பாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் குருநாகல், மந்துராகொட, கொட்டுஹேனவைச் சேர்ந்த ஜி.ஜி.ஏ. சிந்தக பிரசன்ன கருணாரத்ன (30) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
சிப்பாய் தனது சேவைத் துப்பாக்கியால் சூட்டுக்கு உள்ளாகியுள்ள நிலையில், இது தற்கொலையாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து திருகோணமலை தலைமையக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

