மன்னாரில் (Mannar) மாணவி ஒருவரிடம் தாகாத முறையில் நடந்து கொண்ட இராணுவ சிப்பாய்
ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று காலை (18) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மன்னார் மடு பிரதேசத்தில் இருந்து முருங்கன் பகுதியில் உள்ள பாடசாலைக்கு அரச
பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த பாடசாலை மாணவியிடம் அவர் தாகாத முறையில் நடந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாடசாலை மாணவி
இதையடுத்து, பாடசாலை மாணவி முருங்கன் காவல் நிலையத்தில் முறைப்பாடு
செய்துள்ளார்.
இதன்பின்பு முருங்கன் காவல் நிலைய காவல்துறையினர் குறித்த இராணுவ சிப்பாயை கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முருங்கன் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
you may like this
https://www.youtube.com/embed/2REmMbNDLpo