நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறிய தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ணவை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார இன்று (29) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
2008 ஆம் முதல் கோட்டை நீதிமன்றில் நிலுவையில் இருக்கும் இரண்டு வழக்குகள் தொடர்பாக குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னிலையாகததற்கான காரணம்
இந்த வழக்கு இன்று (29) நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டபோது, சந்தேக நபரான நாடாளுமன்ற உறுப்பினர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருக்கவில்லை.

அவர் சார்பாக நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி, தனது கட்சிக்காரர் தேசிய நில விநியோக திட்டத்தில் பங்கேற்றதால் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாக முடியவில்லை என்று நீதவானிடம் தெரிவித்துள்ளார்.
அதன்படி, முன்வைக்கப்பட்ட வாதங்களை கருத்தில் கொண்டு, சந்தேக நபருக்கு கோட்டை நீதவான் பிடியாணை பிறப்பித்துள்ளார்.

