கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மாத்தறை, துடாவ பிரதேசத்தை சேர்ந்த 44 வயதான குறித்த பயணி, இத்தாலியில் இருந்து ஃப்ளை துபாய் FZ 579 விமானத்தில் துபாய் வழியாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தார்.
அதன்போது, சந்தேகநபரான பயணி, சட்டவிரோதமாக சிகரட் தொகையொன்றையும், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான விஸ்கி போத்தல்களையும் கொண்டுவந்த நிலையில், அவற்றை சுங்க அதிகாரிகள் கைப்பற்றிய போது, அவற்றை தரையில் வீசி எறிந்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவு
இது குறித்து சுங்க அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறையினருக்கு தெரிவித்ததை அடுத்து, பயணி கைது செய்யப்பட்டார்.

சுங்க அதிகாரிகளின் கடமையைச் செய்வதற்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் அவரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

