கொழும்பு அளுத்கடே நீதிமன்ற வளாகத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட கணேமுல்ல சஞ்சீவவின் கொலையின் முக்கிய சூத்திரதாரியாக கருதப்படும் இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்ட நிலையில் இன்று மாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.
அவர் வந்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய நிலையில் அதிலிருந்து வெளியே வந்த அவர் கைவிலங்குடன் சிரித்த முகத்துடன் வருகை தருவது ஊடகவியலாளர்களின் கமராவில் சிக்கியது.
மேலதிக விசாரணை
இவ்வாறு அழைத்து வரப்பட்ட அவரும் அவருடன் சேர்த்து கைது செய்யப்பட்டவர்களும் மேலதிக விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவரிடம் நடத்தப்படும் விசாரணைகளைப் பொறுத்தே மேலதிக தகவல்கள் மற்றும் தாக்குதலுக்கு உடந்தையாக இருந்தவர்கள் தொடர்பான தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
https://www.youtube.com/embed/uoecjQh8djQ