இலங்கையின் அருகம் குடாவில் இஸ்ரேலிய நாட்டினர் மற்றும் வணிகங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து சர்வதேச சுற்றுலாப்பயணி ஒருவர் கவலை வெளியிட்டுள்ளார்.
அவர் இது குறித்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள காணொளியில்,
“அருகம் குடா இலங்கையில் இருப்பதாக நான் நினைத்தேன். ஆனால், அது இஸ்ரேலின் டெல் அவிவில் இருப்பது போல் தெரிகிறது.
ஹீப்ரு மொழி
அருகம் குடாவில் சிங்களம் அல்லது தமிழுக்குப் பதிலாக பல இடங்களில் ஹீப்ரு மொழி பயன்படுத்தப்படுகின்றது.
சில இடங்களில் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளுக்கு ஆதரவான பிரச்சார ஸ்டிக்கர்கள் கூட உள்ளன.
View this post on Instagram
சிங்களவர்கள் அல்லது தமிழரை விட இங்கு நிறைய ஹீப்ரு பேசுபவர்களையே நான் பார்க்கின்றேன்.
இதேவேளை, உள்ளூர் மக்களைத் தடைசெய்து, அருகம் குடாவில் இஸ்ரேலியர்கள் நிகழ்வுகளை நடத்தியதாகக் கூறப்படுகின்றது” என சுட்டிக்காட்டியுள்ளார்.