சபாநாயகர் அசோக ரன்வல (Asoka Ranwala) தனது கலாநிதி பட்டம் தொடர்பில் எதிர்வரும் 17ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அறிக்கையொன்றை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவின் கலாநிதி பட்டம் குறித்து சமூக ஊடகங்கள் உட்பட அரசியல் தரப்புகளில் இருந்தும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
இதன்படி, எதிர்வரும் 17ஆம் திகதி நாடாளுமன்றில் இந்த விடயங்கள் தொடர்பில் தெளிவான பதிலை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசாங்கத்தின் முடிவு
அத்தோடு, கலாநிதி பட்டம் தொடர்பில் சபாநாயகர் விரைவில் அறிக்கை வெளியிடுவார் என ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரான அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸவும் அண்மையில் அறிவித்திருந்தார்.
இதேவேளை, சபாநாயகரின் அறிக்கையை தொடர்ந்து அரசாங்கம் இது குறித்த தீர்மானத்திற்கு செல்லும் என்றும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறானதொரு பின்னணியில், சபாநாயகரின் கலாநிதி பட்டத்தை பற்றி நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்ப எதிர்க்கட்சிகளும் தயார் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.