எக்ஸ் (X) நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் (Elon Musk) கடந்த 8 மாதங்களில் தன்னைக் கொல்ல 2 முயற்சிகள் நடந்து, 2 பேர் துப்பாக்கிகளுடன் கைதானதாக அதிர்ச்சி தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், தன்னுடைய வித்தியாசமான கருத்துக்கள் பதிவுகள் மூலம் மிகவும் பிரபல்யமாக காணப்படுகின்றார்.
இவ்வாறான கருத்துக்களை கூறி பல சமயங்களில் பேசுபொருளாகின்ற நிலையில், தற்போது இவ்வாறானதொரு கருத்தை பதிவிட்டுள்ளார்.
கொலை முயற்சி
அதாவது, அதிபர் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) மீது மர்ம நபரொருவர் துப்பாக்கியால் சுட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனினும், டொனால்டு டிரம்ப் உயிருக்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை என்பதுடன் அவர் தற்போது, நலமுடன் உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், எலான் மஸ்க் இவ்வாறானதொரு பதிவை பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Dangerous times ahead.
Two people (separate occasions) have already tried to kill me in the past 8 months. They were arrested with guns about 20 mins drive from Tesla HQ in Texas.
— Elon Musk (@elonmusk) July 14, 2024