புதிய இணைப்பு
பெப்ரவரி மாதத்துக்கான “அஸ்வெசும” நலன்புரி கொடுப்பனவுகள் இன்று (13) பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படும் என நலன்புரிப் நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
அந்தவகையில், மொத்தம் 1,725,795 குடும்பங்களுக்கு 12 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை பயனர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது.
முதலாம் இணைப்பு
அஸ்வெசும பயனாளிகளுக்கான பெப்ரவரி மாத கொடுப்பனவு நாளை (13)அவர்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
குறித்த அறிவிப்பானது, நலன்புரி நன்மைகள் சபையினால் இன்று (12) வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, 1,725,795 குடும்பங்களுக்கான பெப்ரவரி மாத அஸ்வெசும கொடுப்பனவு நாளை வரவு வைக்கப்படவுள்ளது.
கொடுப்பனவு
இதேவேளை, குறித்த குடும்பங்களுக்காக ரூ.12,555,651,250 (12 பில்லியன்) விடுவிக்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், சம்பந்தப்பட்ட பயனாளிகள் நாளை முதல் தங்கள் வங்கிக் கணக்குகளில் இருந்து கொடுப்பனவு தொகையைப் பெற முடியும் என்று சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.