நாட்டில் சமுர்த்தி அபிவிருத்தி வங்கியின் ஊடாக அஸ்வெசும கடன் திட்டமொன்று இந்த மாதம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் (Anupa Pasqual) அறிவித்துள்ளார்.
இந்த கடன் திட்டத்தின் கீழ் தொழில் முயற்சி, விவசாயம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்பவற்றுக்காக விசேட முறைமையின் கீழ் கடன்கள் வழங்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நலன்புரி திட்டங்கள்
அத்துடன் நலன்புரி திட்டங்கள் ஊடாக மாத்திரம் நாட்டை வளப்படுத்த முடியாது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை சிறந்த உற்பத்திகள் மூலமாகவே நாட்டை அபிவிருத்தியடையச் செய்ய முடியும் என வலியுறுத்தினார்.
இது தொடர்பான நம்பிக்கையை மக்களுக்கு வழங்குவதற்காகவே இந்தக் கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.