அஸ்வெசும திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு விண்ணப்பங்களை சமர்ப்பித்தவர்களுக்கு அறிவித்தலொன்று வெளியாகியுள்ளது.
அஸ்வெசும திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு விண்ணப்பங்களை சமர்ப்பித்த குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் மக்கள் தொகை கணக்கெடுப்பு 75 % நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை நலன்புரி நன்மைகள் வாரியம் (Welfare Benefits Board) தெரிவித்துள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு
இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு நாடு முழுவதும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகளால் நடத்தப்படுகிறது.
இந்தநிலையில், அடுத்த வாரத்திற்குள் விண்ணப்பங்களை சமர்ப்பித்தவர்களின் வீடுகளுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் செல்லவில்லை என்றால், அருகிலுள்ள பிரதேச செயலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுருத்தப்பட்டுள்ளது.
மேலும், அஸ்வெசும பயனாளிகளை சுயதொழில் முயற்சியாளர்களாக மாற்றுவது தொடர்பான கலந்துரையாடலொன்று வவுனியாவில் (Vavuniya) இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.