முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தின் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் செயலாளர் மீது தாக்குதல்

Courtesy: uky(ஊகி)

முல்லைத்தீவு(Mullaitivu) ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தின் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் சாந்தகுமார் இன்று (18.07.2024) காலை தாக்கப்பட்டுள்ளார்.

இவர் அடையாளம் தெரியாத முவரடங்கிய குழுவினரால் இன்று அதிகாலை 1.30 மணியளவில் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நடந்தது என்ன?

ஒட்டுசுட்டான் தான்தோன்றி சுவர் ஆலயத்தில் நடைபெற்று வரும் திருவிழா இரவு நிகழ்வுகளில் ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தின் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் சாந்தகுமார் கலந்து கொண்டிருந்தார்.

கோவிலில் இருந்து தன்னுடைய வெங்காயச் செய்கை மேற்கொண்டிருந்த தோட்டத்தினை பார்த்து வரும் பொருட்டு சென்றவர் திரும்பி வரும் வழியில் அடையாளம் தெரியாதோரால் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தின் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் செயலாளர் மீது தாக்குதல் | Attack Mullaitivu Development Asociation Secretary

ஒட்டுசுட்டான் தான்தோன்றிசுவர் ஆலயத்திற்கு முன்னுள்ள புதுக்குளம் வீதியில் ஆலயத்தில் இருந்து 500 மீற்றர் தொலைவில் தோட்டத்திற்கு சென்று திரும்பி ஆலயத்தை நோக்கி வந்துகொண்டிருக்கும் போது தாக்கப்பட்டு இருக்கலாம் என சம்பவம் தொடர்பில் கருத்திட்ட ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

தாக்குதலாளிகள் முச்சக்கர வண்டியில் வருகைதந்துள்ள தோடு, இது தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிஸார் நடவடிக்கைகளில் முனைப்பும் காட்டி செயற்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

மருத்துவ உதவி 

தாக்குதலுக்குள்ளான பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் பேசும் திறனற்ற நிலையிலும் தாக்குதலானது இரண்டு கால்களிலும் மற்றும் உடலிலும் மேற்கொள்ளப்பட்டதால் இரத்தக் காயங்களை ஏற்படுத்தியிருப்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தின் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் செயலாளர் மீது தாக்குதல் | Attack Mullaitivu Development Asociation Secretary

இவர் அவசர நோயாளர் காவு வண்டி சேவையான 1990 ஊடாக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்டம் வைத்தியசாலையான மாஞ்சோலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்