Courtesy: Thevanthan-Kilinochi
குரங்குகளினால் பல விவசாய உற்பத்திகள் அழிவடைகின்றமையை தடுக்க, குரங்குகளை பிடிக்கும் கூட்டினை கிளிநொச்சி விவசாயி ஒருவர் வடிவமைத்துள்ளார்.
கிளிநொச்சி திருவையாறு இரண்டாம் பகுதியைச் சேர்ந்த ஐயாக்குட்டி புண்ணியமூர்த்தி என்ற விவசாயியே குறித்த கூட்டினை தயாரித்துள்ளார்.
குரங்குகளினால் பல விவசாயங்கள் அழிவடைந்துள்ளதாகவும் இதனால் விவசாயம் செய்ய முடியாத நிலை காணப்படுவதாகவும் அவர் கூறியள்ளார்.
வனஜீவராசிகள் திணைக்களம்
இதனால் குரங்குகளை உயிரோடு பிடித்து வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கும் நோக்குடன் இதை வடிவமைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், ஜனாதிபதியும் குரங்குகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.