முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் இடம்பெற்ற தொழுநோய் மற்றும் தொற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல்

யாழ்ப்பாணத்தில் (Jaffna) காலநிலை மாற்றத்திற்கூடாக ஏற்படும் உடல், உள ரீதியிலான தாக்கங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ் மாவட்ட  ஹொக்கி அணி மற்றும் காவேரி கலா மன்றத்தின் ஏற்பாட்டில் குறித்த கலந்துரையாடல் நேற்று (19) மாலை இடம்பெற்றது.

இதன்போது உடல் ஆரோக்கியம் தொடர்பான விடயத்தில் விளையாட்டு வீரர்கள் சமூகத்தில் இருப்பவர்களுக்கு முன்மாதிரியாக இருப்பது மிக சிறப்பான விடயம் எனக் குறிப்பிடப்பட்டது.

சமூகத்தை கட்டியெழுப்புதல்

விளையாட்டு வீரர்கள் சூழலியல் பார்வையில் அக்கறை உள்ளவர்களாக இருப்பதன் ஊடாக உடல் ஆரோக்கியம் மிக்க ஒரு சமூகத்தை கட்டியெழுப்ப முடியும் என்பதை குறித்து விழிப்புணர்வை ஏறபடுத்தும் முகமாக குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

யாழில் இடம்பெற்ற தொழுநோய் மற்றும் தொற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல் | Awareness Discussion Regarding Leprosy Epidemic

குறிப்பாக ஒரு விளையாட்டு வீரர் தனது நாளாந்த செயற்பாடுகளில் எவ்விதமாக சூழலியல் மேம்பாட்டுக்கு பங்களிப்பை செய்ய முடியும் எனவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

அதாவது நடந்து செல்லக்கூடிய இடங்களுக்கு நடந்து செல்கின்ற பொழுது அல்லது சைக்கிளில் செல்கின்ற பொழுது ஒரு விளையாட்டு வீரனாக சூழல் மேம்பாட்டுக்கு தனது பங்களிப்பை கொடுக்கின்றான் எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும் அவ்விதமாக தொற்றும், தொற்றா நோய்கள் குறித்து தனது குடும்பத்திலும் விளையாட்டு கழகத்துக்குள்ளும் சமூகத்துக்குள்ளும் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்ற சிறந்த ற ஓர் ஊடகமாக திகழுகின்றான் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

விழிப்புணர்வை ஏற்படுத்தல் 

குறிப்பாக தொற்றும் நோய்களில் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பல்வேறு நோய்கள் தற்போது எமது பிரதேசத்தில் இருப்பதால் அந்த நோய்களில் இருந்து விடுபடுவதற்கு சமூக மட்டத்தில் விளையாட்டு வீரர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்துவர் என்ற கருத்தும் கூறப்பட்டது.

யாழில் இடம்பெற்ற தொழுநோய் மற்றும் தொற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல் | Awareness Discussion Regarding Leprosy Epidemic

அத்துடன் தொழுநோயினால் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கின்றபடியினால் அவைகளில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான விழிப்புணர்வை பெறுவதற்கான ஒரு ஊக்கத்தை இந்த கலந்துரையாடல் மூலம் பெற முடியும்.

இந்தக் கலந்துரையாடலில் விருந்தினர்கள், துறைசார் வைத்திய நிபுணர்கள், தொழுநோயாளர் மறு வாழ்வுக்கான சங்கத்தினர், காவேரி கலா மன்றத்தினர், யாழ்ப்பாண மாவட்ட ஹொக்கி அணியினர் என பலர் கலந்துகொண்டனர்.

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.