கிளிநொச்சியில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் சிறுவர் பாதுகாப்பு தேசிய கொள்கை
தொடர்பாக விழிப்புணர்வூட்டும் ஒரு நாள் செயலமர்வு நிகழ்வு நேற்று (15) நடைபெற்றது.
இந்த செயலமர்வை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் மாவட்ட செயலகம் என்பன இணைந்து
குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்களுக்கு சிறுவர் பாதுகாப்பு தொடர்பில்
விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஏற்பாடு செய்துள்ளன.
பலர் பங்கேற்பு
கிளிநொச்சி மாவட்டச் செயலக திறன் விருத்தி பயிற்சி மண்டபத்தில் நடைபெற்ற
குறித்த நிகழ்வில், மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் கலந்து
கொண்டு ஆரம்பித்து வைத்தார்.
இந் நிகழ்வில் குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்கள், மாவட்ட சிறுவர்
பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.