முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான விழிப்புணர்வு பயிலரங்கம் : வெளியான அறிவிப்பு

10வது நாடாளுமன்றத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு ஒன்று நடைபெற உள்ளதாக நாடாளுமன்ற தலைமைச் செயலகம் தெரிவித்துள்ளது.

குறித்த செயலமர்வானது எதிர்வரும் 25, 26, 27 ஆகிய திகதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 வரை நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

புதிய நாடாளுமன்றத்தின் ஆரம்பத்தின் பாரம்பரிய நடவடிக்கையாக இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு

இந்த மூன்று நாள் செயலமர்வில், நாடாளுமன்ற உறுப்பினரின் பங்கு, நாடாளுமன்ற சிறப்புரிமைகள், நாடாளுமன்றத்தில் சட்டமியற்றும் முறை, நாடாளுமன்றக் குழு செயல்முறை, நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகள், அரசியலமைப்புச் சட்ட விதிகள் குறித்து உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான விழிப்புணர்வு பயிலரங்கம் : வெளியான அறிவிப்பு | Awareness Workshop For Members Of Parliament

எம்.பி.க்கள் மின்னணு வாக்குப்பதிவு முறையை பயன்படுத்தி வாக்களிப்பதற்கான நடைமுறை அமர்வையும் இங்கு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் ஸ்தாபிக்கப்பட்ட ஊழல் எதிர்ப்புச் சட்டம் மற்றும் அது தொடர்பான சட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள், பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சின் நாடாளுமன்ற விவகாரப் பிரிவின் பங்கு குறித்து இங்கு தெரிவிக்கப்பட உள்ளது.

நாடாளுமன்ற செயற்பாடு

மேலும், நாடாளுமன்றத்தின் திணைக்களங்கள் மற்றும் பணியகங்களின் தலைவர்கள் நாடாளுமன்ற செயற்பாடுகளில் எம்.பி.க்களின் பங்களிப்புகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து அந்தந்த பிரிவுகளின் மூலம் தெரிவிக்கப்படவுள்ளது.

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான விழிப்புணர்வு பயிலரங்கம் : வெளியான அறிவிப்பு | Awareness Workshop For Members Of Parliament

குறித்த செயலமர்விற்கு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya), சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல ( (Ashoka Ranwala)), பிரதி சபாநாயகர் கலாநிதி மொஹமட் ரிஸ்வி சாலி (Mohammad Rizvi Sali) , பிரதிக் குழுத் தலைவர் ஹேமலி வீரசேகர, சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake), ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் கலாநிதி நளிந்த ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.