முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாட்டை உலுக்கும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் : அமைச்சர் வெளியிட்ட தகவல்

நாட்டில் கடந்த ஏழு மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை இன்று (09) நாடாளுமன்றத்தில் சிறப்பு அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில்,  கடந்த ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதி முதல் நேற்று (08) வரை நடந்த துப்பாக்கிச் சூடுகளில் 52 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூடு 

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் 62 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களால் நடத்தப்பட்டதாகவும் அதே நேரத்தில் 17 மற்றவைகளால் நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டை உலுக்கும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் : அமைச்சர் வெளியிட்ட தகவல் | Background To The Shooting In Sri Lanka

துப்பாக்கிச் சூடு தொடர்பாக 260 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 229 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, பாதாள உலக குழுவை ஒடுக்குவதற்கு அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், 2022, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளைப் பார்க்கும் போது குற்றங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு எதுவும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்