முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சீரற்ற காலநிலையால் அம்பாறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு

அம்பாறை மாவட்டத்தில் தற்பொழுது தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை
காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அம்பாரை மாவட்ட
அனர்த்த முகாமைத்துவ நிலைய பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். றியாஸ்
தெரிவித்துள்ளார்.

நேற்று முதல் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தாழ்நிலைப்
பிரதேசங்கள் மற்றும் கரையோர பிரதேசங்களை அண்டி வாழும் மக்கள் வெகுவாக
பாதிக்கப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் இந்த சீரற்ற காலநிலை காரணமாக 10
க்கும் மேற்பட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளில் பாதிப்பு
உணரப்பட்டுள்ளது.

போக்குவரத்து சிரமம்

கல்முனை, நாவிதன்வெளி, சம்மாந்துறை, நிந்தவூர், காரைதீவு
,சாய்ந்தமருது ,அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று , ஆலையடிவேம்பு, திருக்கோவில்,
இறக்காமம், உகண , பிரதேச செயலாளர் பிரிவுகளில் இந்த பாதிப்பு
உணரப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் 1000 க்கும் மேற்பட்ட
குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீரற்ற காலநிலையால் அம்பாறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு | Bad Weather 1000 Families Affected In Amparai

அத்துடன் அம்பாறை மாவட்டத்தில் வெள்ள நீர் பரவலால்
கிட்டங்கி மற்றும் மாவடிப்பள்ளி வீதி நீரில் மூழ்கியது .இதனால் போக்குவரத்து
மேற்கொள்வதில் பிரதேச மக்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

அடைமழை காரணமாக
நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கல்லோயா குடியேற்ற கிராமங்களையும்
கல்முனை நகரையும் இணைக்கும் கிட்டங்கி வீதியின் மேலாக வெள்ள நீர் பரவ
ஆரம்பித்துள்ளதுடன் இவ்வீதியூடாக போக்குவரத்து மேற்கொள்வதில் பிரதேச மக்கள்
சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

விவசாய நிலங்களுக்கு அழிவு

அத்தோடு,  சம்மாந்துறை பிரதேச செயலகத்தையும்
காரைதீவு பிரதேச செயலகத்தையும் இணைக்கின்ற மாவடிப்பள்ளி பாலமும் வெள்ள நீரில்
மூழ்கியுள்ளது.இதனூடாக போக்குவரத்து செய்யும் மக்கள் பெரும் சிரமங்களை
எதிர்நோக்குகின்றனர்.

சீரற்ற காலநிலையால் அம்பாறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு | Bad Weather 1000 Families Affected In Amparai

இதேவேளை அம்பாறை மாவட்டத்தில் சில
இடங்களில் பல நாட்களாகப் பெய்து வரும் மழையினால் அதிகமான மழை நீர்
ஓட்டமில்லாமல் வயல் பகுதிகளில் தேங்கி நிற்பதனால் நெற் பயிர்கள் அழுகும்
நிலைக்குள்ளாகியுள்ளதாக பிரதேச விவசாயிகள் கவலை தெரிவிக்கிறனர்.

கழிவு நிர்
வாய்க்கால்களை நேரத்துடன் நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் விவசாயிகளும் கவனம்
செலுத்தி புனரமைக்கப்படாமையால் விதைக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு அழிவு
எற்பட்டு வருவதாக விவசாயிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.

பல கிராம புறங்களில்
உள்ள வீடுகளில் வெள்ளநீர் உட்புகுந்தும் சூழ்ந்தும் காணப்படுவதால் பலர்
பாதுகாப்பாக தங்கள் உறவினர்கள் வீடுகளில் தங்கி வாழும் நிலையும்
ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.