இலங்கை வங்கியின் (Bank of Sri Lanka ) சங்கானை (Chankanai) கிளையில் உள்ள தன்னியக்க சேவை இயந்திரமானது
நீண்ட காலமாக திருத்தம் செய்யப்படாமல் காணப்படுவதாக வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
குறித்த இயந்திரமானது சில வேளைகளில் இயங்கியும் இயங்காமலும்
காணப்படும் நிலையில் இது குறித்து வாடிக்கையாளர்கள் பல தடவைகள் முகாமையாளருக்கு
முறைப்பாடு செய்தும் பலன் கிட்டவில்லை என கூறியுள்ளனர்.
நாசாவின் விண்வெளி ஆய்வில் பங்கேற்கும் இலங்கைப் பெண்
வாடிக்கையாளர்கள் கோரிக்கை
இந்நிலையில் சங்கானை (Chankanai) கிளையில் தன்னியக்க இயந்திரம் செயற்படாததன் காரணமாக வாடிக்கையாளர்கள் அடுத்த கிளையின்
தன்னியக்க சேவை இயந்திரத்தை பெறுவதற்கு நீண்ட தூரம் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இலங்கை வங்கி அரச வங்கியாக அமைந்துள்ள போதிலும் இதுவரை திருத்தம் செய்யப்படவில்லை என்பதனால் விரைவில் குறித்த
இயந்திரத்தினை திருத்தம் செய்து தருமாறு வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: தேசிய மக்கள் சக்தி அளித்த வாக்குறுதி
பிரித்தானியா அறிமுகம் செய்துள்ள புதிய விசா திட்டம் – புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சித் தகவல்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |