நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களம் (Excise Department of Sri Lanka) அறிவித்துள்ளது.
77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து மதுபானசாலைகளும் நாளை (04.02.2025) மூடப்படவுள்ளது.
மதுபானசாலை
இலங்கையின் 77ஆவது சுதந்திர தின பிரதான நிகழ்வுகள் நாளை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) தலைமையில் வெகு விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது.
இம்முறை பொதுமக்கள் அதிகமாக பங்கேற்கக் கூடிய கொண்டாட்டமாக சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
நாட்டின் கௌரவத்தை மேலோங்க செய்யும் வகையில், சுதந்திர தின நிகழ்வுகள் வெகுவிமரிசையாகவும் அதேவேளை, செலவுகளைக் கட்டுப்படுத்தும் வகையிலும் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.