முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இழுத்தடிப்பு செய்யும் பசில்! நீதிமன்றில் உடைக்கப்பட்ட உண்மைகள்

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச நேற்று(21) வழக்கு விசாரணைக்காக நாட்டிற்கு வருகை தருவதற்காக பயண ஆவணங்களை முன்பதிவு செய்து பின்னர் அவற்றை ரத்து செய்துள்ளதாக மாத்தறை நீதவான் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபருக்கு இடது பக்கத்தில் உணர்வின்மை காரணமாக அவர் பயணம் செய்யத் தகுதியற்றவர் என்று கூறி அவரது சார்பாக மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், ஆவணங்களை ஆய்வு செய்யும் போது சந்தேக நபர் பசில் ராஜபக்ச வேண்டுமென்றே நீதிமன்றத்தைத் தவிர்க்கிறார் என்ற கடுமையான சந்தேகம் இருப்பதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மருத்துவ அறிக்கை

சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் சம்பாதித்த ரூ. 50 மில்லியனைப் பயன்படுத்தி மாத்தறை பிரவுன்ஸ் ஹில்லில் ஒன்றரை ஏக்கர் நிலத்தை வாங்கியது தொடர்பாக பசில் ராஜபக்ச மற்றும் நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று மாத்தறை நீதவான் சதுரயா திசாநாயக்க முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இழுத்தடிப்பு செய்யும் பசில்! நீதிமன்றில் உடைக்கப்பட்ட உண்மைகள் | Basil Fails To Appear For Trial

வழக்கின் முதல் மற்றும் இரண்டாவது சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையான போதிலும், மூன்றாவது மற்றும் நான்காவது சந்தேக நபர்களான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் அவரது மனைவியின் சகோதரி அயோமா கலப்பத்தி ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, சந்தேக நபரான பசில் ராஜபக்வின் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா, தனது கட்சிக்காரரின் மருத்துவ பதிவுகள் அடங்கிய கோப்பை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

கடுமையான சந்தேகம் 

இது குறித்த நீதிமன்றுக்கு சுட்டிக்காட்டிய பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி, 

“இந்த வழக்கின் மூன்றாவது சந்தேக நபரான பசில் ராஜபக்ஷ, கடைசியாக செப்டம்பர் 18, 2024 அன்று நீதிமன்றத்தில் முன்னிலையானார், அதாவது அவர் ஒரு வருடத்திற்கும் மேலாக நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.

முந்தைய வழக்கில் அவரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த மருத்துவ அறிக்கையில், தங்கள் கட்சிக்காரர் நாற்காலியில் இருந்து விழுந்ததால் ஏற்பட்ட கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக விமான பயணத்திற்கு தகுதியற்றவர் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்ததாக கூறப்பட்டது.

இழுத்தடிப்பு செய்யும் பசில்! நீதிமன்றில் உடைக்கப்பட்ட உண்மைகள் | Basil Fails To Appear For Trial

இருப்பினும், எக்ஸ்ரே அறிக்கைகளில் எலும்பு முறிவுகள் எதுவும் இல்லை.

அன்று, சந்தேக நபரின் பிணைதாரர்களுக்கு சந்தேக நபரை இன்று நீதிமன்றத்தில் முற்படுத்த உத்தரவிடப்பட்டது. இருப்பினும், சந்தேக நபர் பசில் ராஜபக்ச இன்றும் இங்கு இல்லை.

தற்போது, அவரது சட்டத்தரணிகள் சமர்ப்பித்த மருத்துவ அறிக்கையில், சந்தேக நபர் பசில் ராஜபக்சவுக்கு உடலின் இடது பக்கத்தில் உணர்வின்மையை ஏற்படுத்தும் ஒரு நிலை இருப்பதாகவும், எனவே அவர் விமானத்தில் பயணிப்பதற்கு தகுதியற்றவர் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், கௌரவ நீதிபதி அவர்களே, இந்த ஆவணங்களை நான் படித்தவுடன், சந்தேக நபர் உண்மையில் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறாரா அல்லது நீதிமன்றத்தைத் தவிர்க்கிறாரா என்பதில் எனக்கு கடுமையான சந்தேகம் ஏற்பட்டது.” என்றார்.

அதன்படி, வாத பிரதிவாதங்களை கேட்டறிந்த நீதவான், சந்தேகநபர் பசில் ராஜபகச சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளுக்கு சந்தேகநபர் தொடர்பான விரிவான மருத்துவ அறிக்கையை நாளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.

அத்தகைய சமர்ப்பணம் செய்யப்படாவிட்டால், சந்தேகநபர் தொடர்பாக நீதிமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள பிணைப் பணத்தை பறிமுதல் செய்யாமல் இருப்பதற்கான  காரணங்களைக் காட்டுமாறும் நீதிபதி சட்டத்தரணிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும், சந்தேகநபர் பசில் ராஜபகசவை நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு பிணையாளர்களை எச்சரித்த நீதவான், வழக்கு விசாரணைகளை அடுத்த ஆண்டு மே 22 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.