1999இல் அதிகமாக பேசப்பட்ட அதற்கு பின்னர் மறைக்கப்பட்ட ஒரு விடயமாக படலந்த முகாம் விவகாரம் உள்ளது.தற்போது அல்ஜஹீரா நேர்காணலினூடாக மீண்டும் இந்த விடயம் பேசுபொருளாகியுள்ளது.
இன்றையதினம் நாடாளுமன்றிலும் இந்த விடயம் தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில்,
அல்ஜஹீரா ஊடகம் கேட்ட பின்னர் இந்த அறிக்கைகளை சமர்ப்பிக்கப்பட வேண்டிய தேவை தேசிய மக்கள் சக்தியினருக்கு உள்ளது.எந்தவிடயம் பேசுபொருளாகியுள்ளதோ அதனை வைத்து இலாபம் தேடும் வேலையை தேசிய மக்கள் சக்தி செய்கின்றது என சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்தார்.
லங்காசிறியின் பிரத்தியேக நேர்காணலில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதேபோன்று தமிழ் மக்களுக்கு இடம் பெற்ற துன்பங்கள் ஏனைய தரப்பிற்கு இடம்பெற்ற கொடூரங்கள் சித்திரவதைகள் கொலைகள் தொடர்பாக அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படுமா? என கேள்வியெழுப்பினார்.
இது தொடர்பாக விரிவான விளக்கங்களை கீழுள்ள காணொளியில் காணலாம்.