முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

படலந்த முகாமின் கொடூரங்களை கண்ணால் கண்ட நபர்: வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்கள்

படலந்த வதைமுகாமில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொண்ட கொடூரங்களை கண்ணால் கண்டதாக தெரிவிக்கும் முன்னாள் இராணுவ புகைப்படக்கலைஞர் ஒருவர் பல திடுக்கிடும் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார். 

வானொலி ஊடகம் ஒன்றுக்கு சிங்கள மொழியில் வழங்கிய நேர்காணல் ஒன்றில் அவர், தான் இரண்டு தடவைகள் படலந்த சித்திரவதை முகாமிற்கு சென்றதாக தெரிவித்துள்ளார். 

இராணுவத்தில் புகைப்படக்கலைஞராக பணியாற்றியுள்ள அவர், கொல்லப்படவுள்ளதாக பெயரிடப்பட்டுள்ளவர்களின் புகைப்படங்களை பெறுவதே அக்காலத்தில் அவருக்கு வழங்கப்பட்டிருந்த கடமை என அவர் குறிப்பிட்டுள்ளார். 

இராணுவ புகைப்படக்கலைஞர்

எனவே, இதன் காரணமாக அவர், அக்காலப்பகுதியில் கொழும்பில் உள்ள அனைத்து சித்திரவதை முகாம்களுக்கும் சென்றுள்ளார். 

படலந்த முகாமின் கொடூரங்களை கண்ணால் கண்ட நபர்: வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்கள் | Batalandha Issue Ranil Wickremesinghe New Update

அந்தவகையில், படலந்த வதைமுகாமிற்கு இரண்டு தடவைகள் அவர் சென்றுள்ள நிலையில், முதலாவது நாள் மூவரின் புகைப்படங்களை எடுப்பதற்கு அவருக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளது. 

அதன்போது, முகாமில் சிவில் உடை அணிந்திருந்த பிரதானி ஒருவர் புகைப்படக்கலைஞரை அழைத்து சென்றுள்ள நிலையில், டக்ளஸ் பீரிஸ், நளின் தெல்கொட மற்றும் கரவிட்டகே தர்மதாச ஆகியோர் அங்கிருந்ததை தான் பார்த்ததாக அவர் தெரிவித்துள்ளார். 

மேலும், முதல் நாள் அவர் அங்கு சென்றிருந்த போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முகாமின் அறை ஒன்றில் உரிய பிரதானியுடன் உரையாடிக் கொண்டிருந்ததாக குறிப்பிட்டுள்ளார். 

உத்தியோகபூர்வ இல்லம் 

அதற்கு பின்னர், சித்திரவதை கூடத்திற்கு சென்று புகைப்படம் எடுக்க வேண்டிய மூவரையும் தன்னிடம் ஒப்படைத்ததாகவும், அப்பகுதியில் 30 பேர் அளவில் இருந்ததாகவும் புகைப்படக்கலைஞர் கூறியுள்ளார். 

படலந்த முகாமின் கொடூரங்களை கண்ணால் கண்ட நபர்: வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்கள் | Batalandha Issue Ranil Wickremesinghe New Update

இதன்போது, மிக கொடூரமான முறையில் தாக்கப்பட்ட நிலையில் பல இளைஞர்கள் அங்கு இருந்துள்ளதுடன் அவர்களை தான் கண்டதாக புகைப்படக்கலைஞர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், “ரணில் விக்ரமசிங்க, அக்காலப்பகுதியில் இளைஞர் விவகார அமைச்சராக இருந்தார் என எனக்கு ஞாபகம் இருக்கின்றது. அண்மைக்காலத்தில் கூட வசந்த முதளிகேவை கொலை செய்ய ரணில் முயற்சித்தார் என அனைவருக்கும் தெரியும். அக்காலத்திலும் அப்படித்தான். அவர் தனிப்பட்ட ரீதியில் இச்சித்திரவதை முகாமுடன் தொடர்புற்றார். 

அதேவேளை, உரக்களஞ்சிய அறைக்கு கொஞ்சம் தூரத்தில் அவர்களின் உத்தியோகபூர்வ இல்லம் இருந்தது. அதில் டக்ளஸ் பீரிஸ் இருந்தார். ரணில் விக்ரமசிங்கவுக்கு வேறு வீடுகளும் இருந்தன. அவரும் அங்கு அதிகமாக தங்கியிருந்துள்ளார். 

கொல்லப்பட்டவர்களின் புகைப்படங்கள் 

நான் 1000க்கணக்கான புகைப்படங்களை எடுத்துள்ளேன். அவர்களில் நாளை கொலை செய்ய தீர்மானிக்கப்பட்டவர்களே இருப்பார்கள். அம்முகாமின் ஒருங்கிணைந்த செயற்பாட்டு தலைமையகம் ஒரு இரகசிய அல்பம் ஒன்றினை பராமரித்து வந்தது. 

படலந்த முகாமின் கொடூரங்களை கண்ணால் கண்ட நபர்: வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்கள் | Batalandha Issue Ranil Wickremesinghe New Update

அந்த அல்பத்தை, கைது செய்த ஒருவருக்கு வழங்கி, அதில் உள்ளவர்களுடனான தொடர்புகள் குறித்து தெரிந்து கொள்ளப்படும். எனவே, கொலை செய்யும் அனைவரின் புகைப்படங்களையும் நிச்சயம் எடுத்து வைத்துக்கொள்வார்கள்” என புகைப்படக்கலைஞர் கூறியுள்ளார். 

அதேவேளை, ரோஹண விஜயவீர இறுதி நேரத்தை பார்த்ததாகவே, குறித்த புகைப்படக்கலைஞர் அனைவராலும் அறியப்பட்டுள்ளார்.

“அந்தவகையில், தான் ரோஹண விஜயவீர எவ்வாறு கொலை செய்யப்பட்டார் என்பதை கண்ணால் கண்டேன். எனவே இது தொடர்பான அனைத்து விடயங்களும் அடங்கிய சத்தியக்கடதாசியை 1996ஆம் ஆண்டு, சட்டமா அதிபருக்கு அனுப்பினேன். 

அதில், ரோஹண விஜயவீர உள்ளிட்ட நான் புகைப்படம் எடுத்த அனைவர் தொடர்பிலும் எங்கு வேண்டுமானாலும் சாட்சி சொல்லுவதாக தெரிவித்திருந்தேன். 

ரோஹண விஜயவீர கொலை 

மேலும், இது தொடர்பில் அப்போது, பத்திரிக்கை ஒன்றில் தெளிவாக விளக்கப்பட்டது. அதில் கொலைகாரர்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்கப்படும் என ஜேவிபியால் தெரிவிக்கப்பட்டது. படலந்த விவகாரத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா ஆணைக்குழு அறிக்கையை மறைத்து ரணிலை காப்பாற்றினார்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

படலந்த முகாமின் கொடூரங்களை கண்ணால் கண்ட நபர்: வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்கள் | Batalandha Issue Ranil Wickremesinghe New Update

அத்துடன், எனது சத்தியக்கடதாசி குறித்த பத்திரிக்கையில் முழுமையாக வெளியிடப்பட்டுள்ளது. ஒரு எழுத்து கூட மாறாமல் மக்கள் விடுதலை முண்ணனியின் பத்திரிக்கையில் அச்சிடப்பட்டுள்ளது. 

எனவே, அனைத்த உண்மைகளும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. காலம் தாழ்த்தாமல் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குங்கள் என ஜனாதிபதி அநுரகுமாரவை நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம்” என குறிப்பிட்டுள்ளார். 

நாட்டில் மீண்டும் பரபரப்பு நிலையை ஏற்படுத்தியுள்ள படலந்த விவகாரம் சூடு பிடித்துள்ளது. இத தொரடர்பான ஆணைக்குழு அறிக்கையும் இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

எனவே, இது குறித்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கவனமெடுத்து பாதிக்கப்பட்டோருக்கு நீதி பெற்றுத்தர வேண்டும் என பல்வேறு தரப்புகளில் இருந்து கோரப்பட்டு வருகின்றது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.