புறக்கோட்டையில் அதிக விலைக்கு விற்பனைக்கு தயாராக இருந்த அரிசித் தொகுதியை நுகர்வோர் விவகார அதிகாரசபை (Consumer Affairs Authority) அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த நடவடிக்கை இன்று (12) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணை
இந்தநிலையில், குறித்த பகுதியில் உள்ள களஞ்சியசாலை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து கிலோ அரிசி பைகள் சுமார் 3,000 ஐ நுகர்வோர் விவகார அதிகாரசபை பறிமுதல் செய்துள்ளது.
பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரிசி மூட்டைகள் வரவிருக்கும் ரமழான் பண்டிகை காலத்தில் அதிக விலைக்கு விற்க தயாராக இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.