கொழும்பு – மட்டக்களப்புக்கு இடையிலான பிரதான தொடருந்து சேவைகளில் மாற்றம் கொண்டுவரப்பட்ட நிலையில், அது தொடர்பில் பயணிகள் இடத்தில் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடுமீனாகிய புலத்தசி எனப்படும் குறித்த தொடருந்து சுமார் 11 மணித்தியாளர்களின் பின் மட்டக்களப்பை
வந்தடைந்ததாக கூறப்படுகிறது.
காட்டு யானைகளின் உயிரிழப்பை தடுப்பதற்காக 2025.03.07 ஆம் திகதியிலிருந்து
கொழும்பு மட்டக்களப்பு இடையிலான பிரதான தொடருந்து சேவைகளில் மாற்றம்
கொண்டுவரப்பட்ட போதிலும்
வெள்ளிக்கிழமை(07.03.2025) கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு 11 மணிக்கு
புறப்பட இருந்த பாடுமீன் தொடருந்து புலத்திசியாக மாற்றப்பட்டு அரை
மணித்தியாலம் ஆசன முற்பதிவுகளில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக பிந்தியே
மட்டக்களப்புக்கு புறப்பட்டது.
2 மணித்தியாலங்கள் தாமதம்
இருப்பினும் சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு மட்டக்களப்பு வராமல் 2
மணித்தியாலங்கள் தாமதமாக வந்ததால் அதில் பிரயாணம் செய்த பயணிகள் பலத்த
அசோகரியங்களை எதிர்நோக்கியதாக கூறப்படுகிறது.
வயதானவர்கள் நோயாளிகள் குழந்தைகள் அரச
உத்தியோஸ்தர்கள் தூர இடத்து பிரயாணிகள் தாம் மிகுந்த அசௌகரியங்களை எதிர்
நோக்கியதாகவும், காட்டு யானைகளை காப்பாற்றுவதற்காக மனிதர்களை வதைக்க வேண்டாம்
என அவர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.
முன்பு இருந்தது போல் தங்களுக்கு நேர மாற்றத்தை ஏற்படுத்தி தருமாறு கோரிக்கைகள்
விடுத்துள்ளனர்.