முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மூன்று தசாப்தங்களுக்கு பின்னர் புனரமைக்கப்பட்டு கையளிக்கப்பட்ட வெளிச்சவீடு

இலங்கையில் (Sri Lanka) மிக உயரமான வெளிச்சவீடுகளில் ஒன்றான மட்டக்களப்பு (Batticaloa) முகத்துவார பாலமீன் மடு வெளிச்சவீடு சுமார் 30 வருடங்களுக்கு பின் புனரமைக்கப்பட்டு மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வானது நேற்று (20) மாலை இடம்பெற்றுள்ளது.

இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனால் (s. Viyalendiran) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் (Senthil Thondaman) மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) ஆகியோரிடம் இந்த வெளிச்சவீட்டினை புனரமைக்கும் நடவடிக்கை தொடர்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

மாநகர சபை

இந்நிலையில், தற்போது இந்த வெளிச்சவீடு, சுமார் 7.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மீள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது.

மூன்று தசாப்தங்களுக்கு பின்னர் புனரமைக்கப்பட்டு கையளிக்கப்பட்ட வெளிச்சவீடு | Batticaloa Light House Been Reconstructed

1913ஆம் ஆண்டு கட்டப்பட்ட, 111 வருடங்கள் பழமையான இந்த வெளிச்சவீடானது கடற்றொழிலாளர்களின் கடற்கரை விளக்காகவும், வெளிநாட்டவர்களின் சுற்றுலா தளமாகவும் காணப்படுகின்றது.

மாநகர ஆணையாளர் சிவலிங்கம் தலைமையில் இடம்பெற்ற வெளிச்ச வீடு கையளிக்கும் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் ஆகியோர் பிரதம அதிதியாக கலந்து கொண்டுள்ளனர்.

மேலும், முன்னாள் மாநகர சபை உறுப்பினர், பொறியியலாளர் சித்திராதேவி லிங்கேஸ்வரன் மற்றும் , மாநகர சபை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் கடற்றொழில் சங்க அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.