Courtesy: Sivaa Mayuri
மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் புதிய அப்போஸ்தலிக்க பரிபாலகராக அருட்கலாநிதி அன்டன் ரஞ்சித் ஆண்டகை நியமிக்கப்பட்டுள்ளார்.
திருதந்தை பிரான்சிஸினால் இன்று (19.08.2024) பி.ப 3.30 மணிக்கு இந்த பதவி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
அவர், தேசிய கத்தோலிக்க இளைஞர் சம்மேளனத்தின் பொறுப்பு ஆயராகவும், கொழும்பு மறை மாவட்டத்தின் துணை ஆயராகவும் பணியாற்றி வருகின்றார்.
பதவி விலகல்
மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா சுகவீனம் காரணமாக பதவி விலகுவது பாப்பரசர் பிரான்சிஸால் இன்று ஏற்று கொண்டுள்ளப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த பதவிக்கு ஆயர் அன்டன் ரஞ்சித் நியமிக்கப்பட்டுள்ளதாக வத்திக்கான் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.