முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மட்டக்களப்பில் சிறுமிகளுக்கு நேர்ந்த கொடூரம்: ஒருவாரத்தில் பாதிக்கப்பட்ட 3 பேர்

மட்டக்களப்பில் (Batticaloa) இரு காவல்துறை பிரிவிலுள்ள பிரதேசங்களில் ஒருவாரத்தில் மூன்று சிறுமிகள் தகாதமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் 13 மற்றும் 17
வயதுடைய இரு சிறுமிகள் கர்ப்பம் தரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இரு ஆண் சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை அந்தந்த காவல் நிலைய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆண் சிறுவர்கள்

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஒரு காவல் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் சில தினங்களுக்கு
முன்னர் வாந்தியெடுத்த 17 வயது சிறுமி ஒருவரை வைத்தியசாலையில் அனுமதித்த போது
அவர் மூன்று மாத கர்ப்பிணியாக இருப்பதை வைத்தியர்கள் கண்டறிந்துள்ளனர்.

இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டபோது குறித்த சிறுமியின் தாய்
தந்தையர் கடற்றொழிலுக்காக வெளியில் செல்லுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பில் சிறுமிகளுக்கு நேர்ந்த கொடூரம்: ஒருவாரத்தில் பாதிக்கப்பட்ட 3 பேர் | Batticaloa Police Report Child Abuse Cases A Week

இந்தநிலையில், வீட்டில் குறித்த சிறுமியும் அவரது சகோதரரும் மாத்திரமே இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மூன்று மாத்திற்கு முன்னர் சம்பவதினத்தன்று சிறுமி வீட்டிற்கு வீதியால் இரவு நடந்து வரும் போது இருட்டில் வந்த ஒருவன் தன்னை இழுத்துச் சென்று தகாதமுறைக்கு உட்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

காவல்துறையினர் விசாரணை

அத்தோடு, குறித்த நபரை அடையாளம் தெரியாது என காவல்துறையினர் விசாரணை அவர் குறிப்பிட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதனுடன், குறித்த அதே காவல் பிரிவில் 13 வயது சிறுமி ஒருவரை மூன்று மாத
கர்ப்பிணியாக்கிய 17 வயது சிறுவன் ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பில் சிறுமிகளுக்கு நேர்ந்த கொடூரம்: ஒருவாரத்தில் பாதிக்கப்பட்ட 3 பேர் | Batticaloa Police Report Child Abuse Cases A Week

இதன் போது கைது செய்யப்பட்ட சிறுவன் நான் இதற்கு காரணம் இல்லை எனது நண்பன் தான் இந்த
சம்பவத்துக்கு காரணம் எனவ தெரிவித்துள்ளார்.

இருப்பினும், பாதிக்கப்பட்ட சிறுமி இல்லை
இவன்தான் காரணம் என முறைப்பாட்டில் தெரிவித்ததையடுத்து கைது செய்யப்பட்ட
சிறுவனை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

நீதிமன்றத்தில் முன்னிலை

இதையடுத்து, அவரை 14 நாட்கள்
விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்தநிலையில், மாவட்டதிலுள்ள இன்னொரு காவல் நிலைய பிரிவின் கீழ் உள்ள
பிரதேசம் ஒன்றில் 15 வயது சிறுமி ஒருவரை தகாதமுறைக்கு உட்படுத்திய 17 வயது சிறுவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பில் சிறுமிகளுக்கு நேர்ந்த கொடூரம்: ஒருவாரத்தில் பாதிக்கப்பட்ட 3 பேர் | Batticaloa Police Report Child Abuse Cases A Week

இதையடுத்து, அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையைில், அவரை 14
நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு ஒரு வாரத்தில் மூன்று சிறுமிகள் தகாதமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.