வங்காள விரிகுடா கடற்பகுதியில் இன்று (டிசம்பர் 2, 2025) காலை 7.26 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 4.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது என்று தேசிய நில அதிர்வு மையம் (National Center for Seismology) தகவல் வெளியிட்டுள்ளது.

இயற்கை பேரழிவு
இந்த நிலநடுக்கத்தால் கடலோரப் பகுதிகளில் எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களிடையே சுனாமி போன்ற மற்றுமொரு இயற்கை பேரழிவு ஏற்படுமோ என்கிற அச்ச உணர்வு நிலவுவதால் நில அதிர்வு மையம் தொடர்ந்து இது குறித்த கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றது.


