முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்க பிரதமர் ஹரிணி அமரசூரிய கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு ரகசியமாக சென்றதான தகவல்களை வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளரான ருக்ஷான் பெல்லனவே கசியவிட்டதாக கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தச் செய்தி முதலில் ஒரு முன்னணி தொலைக்காட்சி சனலில் ஒளிபரப்பப்பட்டது, பின்னர் பல ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக தளங்களில் பகிரப்பட்டது.
எவ்வாறாயினும், செய்தி வெளியிடப்பட்ட உடனேயே, பிரதமர் ஹரிணி அமரசூரிய குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை நடத்த வலியுறுத்தியிருந்தார்.
வாக்குமூலம்
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) நடத்திய விசாரணைகளின்படி, வைத்தியர் பெல்லன தகவலின் உண்மை தன்மையை சரிபார்த்ததாக ஊடக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இதன்படி, குறித்த சம்பவம் தொடர்பாக ருக்ஷான் பெல்லனாவிடமிருந்து வாக்குமூலமொன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ரணில் வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து சில சம்பவங்களை மிகைப்படுத்தியதாகவும், மருத்துவ நெறிமுறைகளை மீறியதாகவும், ரகசிய வைத்திய விவரங்களை ஊடகங்களுக்கு சட்டவிரோதமாக வெளியிட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு பெல்லன மீது சுகாதார அமைச்சகம் ஒழுக்காற்று விசாரணையைத் தொடங்கியுள்ளது.
அரசாங்கத்தின் குற்றச்சாட்டு
அத்துடன், அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளராகப் பணியாற்றியதாகக் கூறி, ஒரு வைத்திய நிபுணராக இல்லாமல் ஒரு அரசியல்வாதியாகச் செயல்படுவதாக அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

இருப்பினும், பெல்லன குறித்த குற்றச்சாட்டுக்களை மறுத்து, தனக்கு அத்தகைய தொடர்புகள் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

