அழகிய நீளமான கூந்தல் என்பது அனைத்து பெண்களினதும் பெரிய கனவாகவே காணப்படுகின்றது.
ஆனால் அதனை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கை என்பது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகவே உள்ளது.
இந்தநிலையில், எவ்வித செயற்கையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இயற்கையான முறையில் நீளமான கூந்தலை எவ்வாறு பெறலாம் என்பதை இந்தப்பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- வெங்காய ஜூஸ்- ¼ கப்
- கறிவேப்பிலை- 2 கப்
பயன்படுத்தும் முறை
- முதலில் கறிவேப்பிலையை எடுத்து அரைத்து அத்துடன் வெங்காய சாறை சேர்த்துக்கொள்ளுங்கள்.
-
இதனை கலந்து தலைமுடியின் வேர்வரை தேய்த்துக்கொண்டு பின் அரைமணி நேரம் தலையில் ஊறவைக்கவும்.
- அதன்பின் தலைமுடியை அலசிக்கொள்ளலாம்.
- இதனை வாரத்திற்கு மூன்று முறை இதை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.