பாரிஸில் நடைபெறும் 33 ஆவது ஒலிம்பிக் போட்டி ஆரம்பிக்கப்பட்டு தற்போது பல்வேறு நிகழ்ச்சி மற்றும் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இதனடிப்படையில், பதக்க பட்டியலில் ஆறு தங்கம், இரண்டு வெள்ளி, நான்கு வெண்கலம் என மொத்தம் 12 பதக்கங்களை வென்று ஜப்பான் (Japan) முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
பல்வேறு நிகழ்ச்சி
அத்தோடு, ஐந்து தங்கம், எட்டு வெள்ளி, மூன்று வெண்கலம் அடங்கலாக மொத்தம் 16 பதக்கங்களை வென்று பிரான்ஸ் (France) இரண்டாம் இடத்தில் உள்ளதுடன் ஐந்து தங்கம், ஐந்து வெண்கலம், இரண்டு வெள்ளி அடங்கலாக 12 பதக்கங்களை வென்று சீனா (China) மூன்றாம் இடத்தில் உள்ளது.
மேலும், 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவில் 11 சிறந்த கலாச்சார ஆடைகள் பெயரிடப்பட்டு அவற்றுள் இலங்கையின் கலாசாரத்தை வெளிக்காட்டி உருவாக்கப்பட்ட ஆடையானது மூன்றாம் இடத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.