கொழும்பு மாநகர சபை உட்பட நாடு முழுவதும் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் கடந்த காலங்களில் நடந்த மோசடி மற்றும் ஊழல்களை உடனடியாக விசாரிக்க ஒரு சிறப்பு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட உள்ளதாக நம்பகமான அரசாங்க வட்டாரங்கள் கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளன.
அதன்படி, கேள்வி கோரல், வாகன நிறுத்துமிடங்களை வழங்குதல், ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்தல் மற்றும் முன்னாள் உள்ளூராட்சி உறுப்பினர்கள் சலுகைகளை தவறாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றில் நடந்த மோசடி மற்றும் ஊழல் குறித்து விசாரணைகள் நடத்தப்படும்.
முன்னாள் மேயர்கள் சட்டவிரோதமாகச் சம்பாதித்த சொத்துக்கள்
குறிப்பாக, முன்னாள் மேயர்கள் சட்டவிரோதமாகச் சம்பாதித்த சொத்துக்கள் மீதான விசாரணையும் விரிவாக விசாரிக்கப்படும் என்று தெரியவந்துள்ளது.

அதன்படி, ஊழல் மற்றும் மோசடி குறித்து அரசாங்கம் தனது விசாரணையை நடத்தி வரும் அதே வேளையில், உள்ளூராட்சி நிறுவனங்களில் நடந்த மோசடி மற்றும் ஊழலை விசாரித்து தண்டிக்கும் செயல்முறையையும் அரசாங்கமே தொடங்கியுள்ளது என்று அறியப்படுகிறது.
முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் செய்த முறைகேடு
சமீப காலமாக, சில உள்ளூராட்சி மன்றங்கள் வெள்ளை யானை கோட்பாட்டின் அடிப்படையில் செயல்படுவதாக ஊடக அறிக்கைகள் காணப்படுகின்றன, குறிப்பாக வீதிகளை பழுதுபார்க்கும் செயற்பாட்டில் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கேள்விகளை வழங்குவதில் முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் செய்த முறைகேடுகளும் விசாரிக்கப்படும் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


