நடைபெற்று முடிந்த பொது தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைக்கப்பெற்ற 5 தேசிய பட்டியலில் ஆசனங்களுக்கான பெயர்கள் அக்கட்சியின் பொதுச் செயலாளரால் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி குறித்த ஆசனங்களுக்கு இருபதுக்கும் மேற்பட்டோர் முன்வந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஐக்கிய மக்கள் சக்தி பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் பெயர் மட்டுமே இதன்போது வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
தேசியப் பட்டியலில்
இதற்கமைய தேசியப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஹிருணிகா பிரேமச்சந்திர, வைத்திய சமல் சஞ்சீவ, அசரீ திலகரத்ன, எரான் விக்கிரமரத்ன, மனோ கணேசன் உள்ளிட்டோர்களில் நால்வருக்கு மீதமுள்ள ஆசனங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்தோடு, மீதமுள்ள நான்கு ஆசனங்களில், பிரதிநிதித்துவப்படுத்த பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டால், தனக்கு ஒரு வாய்ப்பு வேண்டும் என்று ஹிருணிகா பிரேமச்சந்திர கூறியதுடன், முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தனக்கான ஆசனத்தையும் கோரியுள்ளார்.
மேலும், தயாசிறி ஜயசேகர நாடாளுமன்றுக்க தெரிவான போதிலும், தேசியப்பட்டியல் ஆசனம் ஒன்றையும் தமது தரப்பும் விரும்புவதாக கூறியுள்ளார்.
மேலும், சஜித் பிரேமதாச தேசியப்பட்டியல் ஆசனம் தொடர்பில் தமக்கு வாக்குறுதி வழங்கியுள்ளதாக மனோ கணேசனின் தரப்பும் தெரிவித்துள்ளன.