இந்த ஆண்டின் முக்கிய விண்கல் மழை பொழிவை இன்றிரவு (20) பார்வையிட முடியும் என வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விண்கல் மழைக்கு ஓரியோனிட்ஸ் (orionids) என்று பெயரிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த விண்கல் மழையை அதிகாலை 3.00 மணி முதல் அதிகாலை 5.00 மணி வரை காண முடியும் என வானியலாளர்கள் குறிப்பிட்டுள்ளார்.
விண்கல் மழை
விண்கல் மழையை பார்க்க விரும்புகிறவர்கள், மின்சார வெளிச்சத்தில்
இருந்து விலகி இருண்ட இடத்தில் இருந்து அதனை பார்க்குமாறும் வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.