வெளிநாடுகளில் உள்ள தமிழ் புலம்பெயர்ந்தோர் நாட்டிற்கு திரும்பி இலங்கையில் (srilanka) முதலீடுகளை மேற்கொள்ள அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார (Manusha Nanayakkara) அழைப்பு விடுத்துள்ளார்.
கிளிநொச்சியில் (Kilinochchi) நேற்று (13) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சியில் உள்ள பெரும்பாலான வர்த்தக நிறுவனங்கள் புலம்பெயர் நாடுகளைச் சேர்ந்தவை.
புலம்பெயர்ந்த தொழிலாளர்
அந்த புலம்பெயர் மக்களை இங்கு வருமாறு அழைக்கிறோம், வேண்டுகோள் விடுக்கிறோம். இலங்கையுடன் ஒன்றிணைந்து எமது நாட்டை ஒன்றிணைந்து கட்டியெழுப்புமாறு அனைவரையும் அழைக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.
எமது பிரதான பிரச்சினையாக இருந்த டொலர் பிரச்சினைக்கு தீர்வாக, புலம்பெயர்ந்த தொழிலாளர்களையும் புலம்பெயர் மக்ககளும் நாட்டிற்கு டொலர்களை அனுப்பிவைப்பதற்கு சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன.
இதனடிப்படையில், எமது புலம்பெயர் தொழிலாளர்கள் 12 பில்லியன் டொலர்களை எமக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், நாட்டை முன்னேற்ற இளம் தலைமுறையினர் முதலீட்டாளர்களாக இருக்க வேண்டும்.
ஒன்றிணைந்து கட்டியெழுப்ப அழைப்பு
2048 ஆண்டுக்கு முன்னர் இலங்கையை வளர்ந்த நாடாக மாற்றி அடுத்த தலைமுறைக்கு பலன் கிடைக்கும் வகையில் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
எனவே, எமது புலம்பெயர்ந்தோர் இலங்கைக்கு வந்து முதலீடு செய்து இலங்கையை அபிவிருத்தி செய்ய ஆவலுடன் காத்திருக்கின்றனர் எனவும், எமது நாட்டை ஒன்றிணைந்து கட்டியெழுப்புமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.