பேர வாவியில் பறவைகள் இறந்தமை தொடர்பாக எடுக்கப்பட்ட நீர் மாதிரிகள் குறித்து இறுதி பரிசோதனை அறிக்கை வெளியிடப்படும் என நாரா நிறுவனம் (National Aquatic Resources Research and Development Agency (NARA) தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கை இன்று (31) வெளியிடப்படும் என்று நாரா நிறுவன சுற்றுச்சூழல் ஆய்வுகள் பிரிவின் தலைவர் கலாநிதி ஷியாமலி வீரசேகர (Dr. Shyamali Weerasekara) குறிப்பிட்டுள்ளார்.
நீரில் அம்மோனியாவின் செறிவு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக அந் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் ஆய்வுகள் பிரிவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
சோதனை அறிக்கைகள்
தண்ணீர் மாசுபட்டுள்ளது என்பதை மாத்திரமே இந்த நேரத்தில் என்னால் சொல்ல முடியும், இருப்பினும், இது தொடர்பான அறிக்கை இன்று வெளியிடப்படும்.
இதற்கிடையில், பேர வாவியில் இறந்த பறவைகளிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளின் பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளதாக நகர கால்நடை வைத்திய அதிகாரி டாக்டர் மொஹமட் இஜாஸ் தெரிவித்தார்.
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் சோதனை அறிக்கைகள் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.