பொகவந்தலாவை (Bogawantalawa) ஆரியபுர பிரதேசத்தில் வசிக்கும் கெலும் பிரதீப் என்பவரின்
வீட்டில், ஊதா நிற கொய்யா வகை பழம் காய்த்துள்ளது.
ஊதா நிறம்
குறித்த கொய்யா மரத்தில் ஊதா நிற, பூக்கள் மற்றும் பழங்கள் இருப்பதாகவும்,
வட்டவளை கிராமத்தில் வசிக்கும் தனது சகோதரியின் வீட்டில் இருந்து இந்த கொய்யா
மரத்தை கொண்டு வந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உரிமையாளர் நட்டுள்ளார்.
இந்நிலையில், இந்தக் கொய்யா மரத்தைப் பார்ப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் தினமும் தனது
வீட்டிற்கு வருவதாக கெலும் பிரதீப் தெரிவிக்கின்றார்.