எல்ல வெல்லவாய வீதியில் விபத்துக்குள்ளான பேருந்தின் சாரதியான இளைஞனின் இரத்த மாதிரிகள் நாளை (7) மேலதிக விசாரணைக்காக அரசு ஆய்வாளருக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை எல்ல காவல்துறையினர் கூறியுள்ளனர்.
தங்காலை மாநகர சபை ஊழியர்கள் குழு ஒன்று பேருந்தில் நுவரெலியாவிற்கு சுற்றுலா சென்று திரும்பிக் கொண்டிருந்த போது, பாரிய விபத்து ஒன்றை சந்தித்திருந்தனர்.
அதன்போது, 500 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த நிலையில், அதில் பயணித்த 15 பேர் உயிரிழந்ததுடன், 18 பேர் படுகாயமடைந்திருந்தனர்.
மேலதிக விசாரணை
விபத்தில் பேருந்தின் சாரதியான தங்காலை, ஹெனகடுவவைச் சேர்ந்த தோமர ஹன்னடிகே சிரத் திமந்த (25) என்பவரும் உயிரிழந்தார்.

இந்த நிலையில், குறித்த பேருந்தை ஓட்டும் போது சாரதி, போதைப்பொருள் அல்லது வேறு ஏதேனும் போதைப் பொருட்களைப் பயன்படுத்தியாரா என்பதை கண்டறிய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதன்படி, அவரது இரத்த மாதிரிகள் மேலதிக விசாரணைக்காக அரசு ஆய்வாளரிடம் சமர்ப்பிக்கப்படும் என்று எல்ல காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி கூறியுள்ளார்.

