யாழ்ப்பாணம் – பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் (Base Hospital, Point Pedro) சில குருதி வகைகளுக்கு தற்போது கடும் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய A+ (A Positive), A- (A Negative), O- (O Negative) ஆகிய குருதி வகைகளுக்கே தட்டுப்பாடு நிலவுகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இரத்ததானம் செய்ய விரும்புவோர் மற்றும் குருதிக் கொடையாளர்கள் பருத்தித்துறை இரத்த வங்கிக்கு வருகை தந்து இரத்ததானம் வழங்கி உதவுமாறு வைத்தியசாலை நிர்வாகத்தினர் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
நோயாளர்களுக்கு சிகிச்சை
இந்த அவசர இரத்ததானம் வழங்குவதன் மூலம் நோயாளர்களுக்கு சிகிச்சையை சீராக வழங்க முடியும் எனவும் வைத்தியசாலை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை எலிக்காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital Jaffna) கடந்த 2ஆம் திகதி இரண்டு மரணங்கள் சம்பவித்துள்ளதாக யாழ் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.