யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை (Teaching Hospital Jaffna) இரத்த வங்கியில் அனைத்து வகையான குருதிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதென இரத்த வங்கி அறிவித்துள்ளது.
குறித்த விடயம் இரத்த வங்கியின் சமூக வலைத்தள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்கள், சத்திரசிகிச்சைகள், குருதிச்சோகை நோயாளர்கள், புற்றுநோயாளர்கள் மற்றும் குருதி தேவைப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வைத்தியசாலையில் அதிகரித்து செல்கின்றது.
இரத்ததானம் செய்து உயிர்காக்க முன்வாருங்கள்
குருதி விநியோகம் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதினால் நோயாளர்களுக்கு தேவையான குருதியை வழங்க முடியாதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆகவே 18 – 55 வயதிற்கு இடைப்பட்ட, 50 Kg ம் அதற்கு மேற்பட்ட நிறையும் கொண்ட ஆண் பெண் இருபாலாரும் எவ்வித பிரச்சனையுமின்றி இரத்ததானம் செய்யலாம்.
ஏற்கனவே இரத்ததானம் செய்தவர்கள் எவ்வித நோய்களுமின்றி இருந்தால் 60 வயது வரை இரத்ததானம் செய்யலாம்.
எனவே தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு ஏற்கனவே இரத்ததானம் செய்து நான்கு மாதங்கள் நிறைவடைந்தவர்களும் புதிதாக இரத்ததானம் செய்ய விரும்புவர்களும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கிக்கு வருகை தந்து இரத்ததானம் செய்து உயிர்காக்க முன்வருமாறு இரத்த வங்கியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

