வவுனியா, கல்மடு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பூம்புகார் பகுதியிலிருந்து இளைஞரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
22 வயது இளைஞரின் குறித்த சடலம் இன்று
(08.06.2025) காலை மீட்கப்பட்டுள்ளதாக
ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணை முன்னெடுப்பு
இளைஞனை காணவில்லை என வீட்டார் தேடிய போது வீட்டின் முன்பாகவுள்ள
மரத்தில் தூக்கில் தொங்கியவாறு சடலமாக காணப்பட்டுள்ளார்.

பொலிஸார் மற்றும் கிராம சேவையாளருக்கு அயலவர்கள் வழங்கிய தகவலையடுத்து சம்பவ
இடத்திற்கு விரைந்த பொலிஸார் இளைஞரின் மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை
முன்னெடுத்து வருகின்றனர்.

