மட்டக்களப்பு (Batticaloa) – பாசிக்குடா சுற்றுலா விடுதியொன்றில் இருந்து ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
பாசிக்குடா சுற்றுலா விடுதியொன்றுக்கு பெண்ணொருவருடன் வருகை தந்திருந்த ஆணொருவரே இவ்வாறு உயிரிழந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
ஓட்டமாவடி பிரதேசத்தின் மாவடிச்சேனையைச் சேர்ந்த 45 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று (17) மாலை உயிரிழந்த நபரும் இன்னொரு பெண்ணும் குறித்த தங்குமிடத்திற்கு வருகை தந்ததாக கூறப்படுகிறது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் கல்குடா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.