மொனராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சிரிகல பிரதேசத்தில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (09.03.2025) காலை இடம்பெற்றுள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணை முன்னெடுப்பு
சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

35 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொனராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

