முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கண்டி நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக போலித்தகவல் கொடுத்த நபர் கைது

புதிய இணைப்பு

கண்டி(Kandy) நீதிமன்ற வளாகத்தில் இன்று(1) வெடிகுண்டு இருப்பதாக 119 காவல்துறை அவசர அழைப்புப் பிரிவுக்கு அழைப்பு விடுத்த நபரை கினிகத்தேன காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கண்டி நீதிமன்ற வளாகத்தில் இன்று(1) வெடிகுண்டு இருப்பதாக காவல்துறையினருக்கு அழைப்பு வந்ததையடுத்து, அங்கு விசேட பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வழக்குகளின் விசாரணையை நிறுத்தி வைக்கப்பட்டு நீதிமன்ற வளாகத்தில் இருந்து மக்களை வெளியேற்ற பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை எடுத்தனர்.

அத்துடன் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு, இராணுவம் மற்றும் காவல்துறையினர் இணைந்து இது தொடர்பான தேடுதல் பணியை மேற்கொண்டிருந்தனர்.

 அதிரடிக் கைது

இதற்கமைய,
கண்டி காவல்துறையினர் கினிகத்தேன காவல்துறையினருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த தொலைபேசி இலக்கத்தின் உரிமையாளரான 53 வயதான ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக போலித்தகவல் கொடுத்த நபர் கைது | Bomb In Kandy Court Excited By The Peoples

சந்தேகநபர் கைது செய்யப்படும் போது குறித்த தொலைபேசி தன்னிடம் இருக்கவில்லை எனவும் நேற்று பிற்பகல் குறித்த தொலைபேசி காணாமல் போயுள்ளதாகவும் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தனியார் பேருந்து நடத்துனராக கடமையாற்றியவர் எனவும், அவரிடம் மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் எனவும் பிரதான காவல் பரிசோதகர் விராஜ் விதானகே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முதலாம் இணைப்பு

கண்டி நீதிமன்ற வளாகத்தில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெடிகுண்டு இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அங்கு வழக்குகளின் விசாரணை நிறுத்தப்பட்டு, நீதிமன்ற வளாகத்தில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

நீதிமன்றத்தில் வெடிகுண்டு

மேலும் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு, இராணுவம் மற்றும் காவல்துறையினர் தற்போது தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கண்டி நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக போலித்தகவல் கொடுத்த நபர் கைது | Bomb In Kandy Court Excited By The Peoples

இதேவேளை, கண்டி நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் ஜூலை 16ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.