யாழ்ப்பாணம் – குருநகர் கடலில் சிறுவன் ஒருவன் இன்று சடலமாக
மீட்கப்பட்டுள்ளார்.
குருநகரைச் சேர்ந்த ஜோர்ஜ் ஸ்ரிபன் மதிவாணன் என்ற 17 வயதான சிறுவனே இவ்வாறு
உயிரிழந்துள்ளார்.
குருநகர் பகுதியில் கடலட்டைப் பண்ணையை பார்க்க நேற்று இரவு சென்ற சிறுவன்
காணாமல்போயிருந்த நிலையில், சிறுவனை அப்பகுதி மக்கள் தேடியுள்ளனர்.

யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணை
இந்நிலையில் இன்று காலை குறித்த சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுவன் படகிலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்திருக்கலாம் என
சந்தேகிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணையை யாழ்ப்பாணம் பொலிஸார்
மேற்கொண்டுள்ளனர்.




