பிரேசில் (Brazil) நாட்டைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற கால்பந்தாட்ட நட்சத்திரம் ரொனால்டோ (Ronaldo) இலங்கைக்கு சுற்றுலா பயணமொன்றை மேற்கொண்டுள்ளார்.
ரொனால்டோவின் இலங்கை வருகையின் போது சிறிலங்கன் விமான சேவையில் அவர் பயணம் செய்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கின்றன
சுற்றுலாத் தலம்
இந்தநிலையில், இலங்கையின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ரொனால்டோ பொழுது போக்கும் புகைப்படங்கள் தற்போது உலகளவில் பேசுபொருளாகத் தொடங்கியுள்ளன.
ரொனால்டோவின் சமூக வலைத்தள கணக்குகளில் பகிரப்படும் குறித்த புகைப்படங்கள் பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்களினால் மீள் பகிர்வு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.