திருகோணமலையில் (Trincomalee) பேருந்து ஒன்றும் மற்றும் பவுசரம் மோதி விபத்துக்குள்ளகியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (06) இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியின் கிண்ணியா காவல் நிலையத்திற்கு முன்பாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சுற்றுலா வந்த பேருந்து ஒன்றும் எரிபொருள் பவுசர் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா காவல்துறையினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



