முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஒதியமலை- எல்லைக்கிராமத்திற்கு பேருந்து சேவை ஆரம்பித்து வைப்பு

ஆக்கிரமிப்பு முற்றுகைக்குள் இருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழர்களது
பூர்வீக எல்லைக்கிராமங்களில் ஒன்றான ஒதியமலைக்கிராம மக்களின் போக்குவரத்து
இடர்பாடு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனின் முயற்சியால் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் ஒதியமலைக் கிராமத்திலிருந்து இன்று(14) மரபுவழியில்
பேருந்து போக்குவரத்துசேவை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவின் எல்லைக்கிராமங்களின் ஒன்றான ஒதியமலைக் கிராமம் தொடக்கம்,
கிளிநொச்சி வரையான வழித்தட அனுமதிப்பத்திரமுள்ள தனியார் பேருந்து நீண்ட காலமாக
ஒதியமலைக் கிராமத்திற்கு சேவையை வழங்குவதில்லை.

போக்குவரத்து சேவை 

குறிப்பாக
கிளிநொச்சியிலிருந்து ஒட்டுசுட்டான்வரையிலேயே இந்த போக்குவரத்து சேவை
இடம்பெற்றிருந்தது.

இவ்வாறு ஒதியமலைக் கிராமத்திற்கான வழித்தட அனுமதிப்பத்திரம் இருந்தும்
நீண்டகாலமாக தமது கிராமத்திற்கு, குறித்த பேருந்து, சேவைகளை வழங்காத
நிலமைதொடர்பில் பலதடவைகள் உரியதரப்பினரிடம் கிராமமக்களால் முறைப்பாடுகள்
மேற்கொள்ளப்பட்டிருந்தன.

ஒதியமலை- எல்லைக்கிராமத்திற்கு பேருந்து சேவை ஆரம்பித்து வைப்பு | Bus Service To Othiyamalai Village Inaugurated

இருப்பினும் இந்த விடயம் தொடர்பில் தீர்வுகாண்பதற்கு உரிய தரப்பினர்களால்
நடவடிக்கை எவையும் மேற்கொள்ளப்படாத நிலையே தொடர்ந்து இருந்து வந்துள்ளது.

இதனால் ஒதியமலைக்கிராம மக்கள் மற்றும் ஒதியமலையிலிருந்து வெளியிடங்களுக்கு
பாடசாலைகளுக்குச்செல்லும் மாணவர்கள் பெருத்த போக்குவரத்து இடர்பாடுகளுக்கு
முகங்கொடுத்து வந்தனர்.

இந்தநிலையில் ஒதியமலைக்கிராம மக்களால் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
துரைராசா ரவிகரனிடம் இதுதொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இத்தகைய சூழலில் கடந்த 03ஆம் திகதி இடம்பெற்ற ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்தி
ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் ஒதியமலைக் கிராமத்திற்கு குறித்த பேருந்து,
சேவையை வழங்காமை குறித்து வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனால் கேள்வி எழுப்பப்பட்டது.

போக்குவரத்து இடர்பாடு

அத்தோடு எல்லைக் கிராமமான ஒதியமலை மக்களின்
போக்குவரத்து இடர்பாட்டைத் தீர்க்க உடனடியாக நடவடிக்கை
எடுக்கப்படவேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தியிருந்த
நிலையில் ஒதியமலைக்கிராமத்திற்கு குறித்த பேருந்து சேவையை வழங்கவேண்டுமென
ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில்
தீர்மானிக்கப்பட்டது.

அதற்கமைய, இன்றையதினம் முல்லைத்தீவின் எல்லைக்கிராமமான ஒதியமலைக்
கிராமத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனின் பங்கேற்புடன் பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டன.

ஒதியமலை- எல்லைக்கிராமத்திற்கு பேருந்து சேவை ஆரம்பித்து வைப்பு | Bus Service To Othiyamalai Village Inaugurated

குறிப்பாக மரபுவழியில்
ஒதியமலைப் பிள்ளையார் கோவிலில் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு குறித்த பேருந்து
சேவைகள் ஆரம்பித்து வகை்கப்பட்டன.

இவ்வாறாக ஒதியமலை எல்லைக்கிராம மக்களின் நீண்டகால போக்குவரத்து இடர்பாடு
நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் தீர்த்துவைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் இராசரத்தினம்
கிரிதரன் பங்கேற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.